தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். சினிமா உலகில் தான் பெரிய ஆளாக இருந்தாலும் அதனை எல்லாம் பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் சாதாரண மனிதராக இருந்து வருபவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது.
தன்னை நம்பி வரும் சினிமா பிரபலங்கள் ஆக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர் நம்ம தல மேலும் அவரால் முடிந்த நலத்திட்ட உதவிகளையும் பொது மக்களுக்கு வழங்குவர்.இந்நிலையில் அஜித் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பத்திரிக்கையாளர் ஒருவர்.
அவர் கூறியது. அஜித்துடன் இணைந்து நயன்தாரா ஏகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடந்துகொண்டிருந்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் நயன்தாரா அவர் சத்தியம் திரைப்படத்தில் நடிக்க சென்னை வர வேண்டியது இருந்தது.அப்பொழுது அஜித் நயன்தாராவை தன் காரில் அனுப்பி வைத்தார் அதுமட்டுமின்றி பாதுகாப்பதற்காக தனது டிரைவரையும் அனுப்பி வைத்ததாக அவர் கூறி நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அஜித் அவர்கள் உதவி என்றால் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யக்கூடிய மனுஷன் சினிமா பிரபலங்கள் ஆக இருந்தாலும் சரி பொது மக்களாக இருந்தாலும்சரி எல்லோரையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடியவர் என அவரது ரசிகர்கள் கூறி சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.