சிம்பு மற்றும் பிரபுதேவாவை கழட்டி விட்டதற்கு இதுதான் காரணம்.! நயன்தாரா அதிரடி பேச்சு.!

prabhu-deva-nayanthara
prabhu-deva-nayanthara

prabhu deva simbu nayanthara love : தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இவர் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர், மேலும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜீத்,விஜய், சூர்யா என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

நயன்தாரா இன்று உச்சத்தில் இருக்கிறார் ஆனால் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்தவர், அதேபோல் நயன்தாரா நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் வரிசையில் இணைந்து விட்டன, இவர் தனியாக நடித்த திரைப்படமான கோலமாவு கோகிலா திரைப்படம் மெகா ஹிட்டானது.

தற்போது மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஆரம்பத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது அதிலிருந்து மீண்டுவந்து இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்ததுதான் இவர் சினிமாவில் தற்போது ஆக்டிவாக தன்னை வைத்துக் கொண்டுள்ளார், சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்பு மற்றும் பிரபுதேவா காதல் முறிவு பற்றி கூறியுள்ளார், அவர் கூறியதாவது ‘நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது’ ‘அங்கிருந்து காதல் வெளியேறிவிடும்’ அது போலதான் ‘நம்பிக்கை இல்லாத ஒருவருடன் பழகுவதை விட தனிமரமாக நிற்பதே சிறந்தது’ என்று அவர்களின் காதலை முறித்துக் கொண்டேன் என வெளிப்படையாக கூறினார்.