சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ பற்றி தான். நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமண வீடியோ netflix ott தளத்தில் ஆவணப்படமாக ரிலீஸ் செய்துள்ளார்கள். இதனை ரசிகர்கள் கண்டு வருகிறார்கள். அதேபோல் நானும் ரவுடிதான் பட காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார்கள் நயன்தாரா.
ஆனால் தனுஷ் எந்த ஒரு பிடிக்கும் கொடுக்காமல் இரண்டு வருடமாக அதை தராமல் மறுத்துள்ளார் இது குறித்து நயன்தாரா திடீரென ஒரு கடிதத்தை வெளியிட்டார் அந்த கடிதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது சிலர் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் இரண்டு விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
Nayanthara: Beyond the Fairy Tale : நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகி விட்ட நிலையில் நயன்தாரா ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் தான் கேட்ட உடன் மறுக்காமல் உடனே என்ஓசி சான்றிதழ் கொடுத்த தயாரிப்பாளர் பெயர்களை குறிப்பிட்டு நன்றி கூறியிருக்கிறார். அதேபோல் ஷாருக்கான் முதல் தமிழில் அவர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்கள் பலர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர் நன்றி கூறியுள்ளார் ஆனால் இந்த லிஸ்டில் தனுஷ் பெயர் மட்டும் அவர் குறிப்பிடவில்லை.
தனுஷ் ஏற்கனவே நயன்தாராவை இழுத்து அடித்த நிலையில் தனுஷை மட்டும் ஒட்டுமொத்தமாக விலக்கி விட்டார் என தெரிகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..