நயன்தாரா அழகின் ரகசியம் இதுதானா.! இதோ வைரலாகும் 4 டிப்ஸ்

nayanthara-jpg
nayanthara-jpg

திரை உலகில் சிறந்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா ஆவார். இவரை ஹாலிவுட்டின்  லேடி சூப்பர் ஸ்டார் என அனைவரும் அன்புடன் அழைப்பர். பெரும்பாலான பெண்களின் ரோல் மாடலாக விளங்குகிறார் நடிகை நயன்தாரா. இவரின் அழகை ரசிகாதவர்களே  இல்லை  ஏன் பெண்களும் கூட தான். தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் பிடித்தவராக அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவருக்கு தற்போது 35 வயது ஆகிறது ஆனால் இன்னும் இவருடைய அழகும், ஸ்டைலும் குறையவில்லை இவருடைய அழகிற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு ஒரு பேட்டியில் 4 டிப்ஸ்களை பெண்களுக்காக கூறியுள்ளார்.

முதலாவதாக இவர் அதிகமான பழங்களையும், பழ ஜூஸ் களையும் சாப்பிட்டு கொண்டே இருப்பாராம் உணவை விட ஜூஸ்கள் தான் அதிகமாக குடிப்பாராம்.

இரண்டாவதாக அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் ஈரப்பதமாக எப்பொழுதுமே இருக்க வேண்டுமாம் எனவே அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருப்பாராம்.

மூன்றாவதாக எவ்வளவு வேலை இருந்தாலும் அதனை தவிர்த்து விட்டு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

நான்காவதாக தினமும் முடியில்  என்னை வைத்து பராமரிப்பாராம். இதுவே முக்கியமான டிப்ஸ் ஆகும் என கூறி உள்ளார்.