Nayanthara : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் ஐயா படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு ரஜினியின் சந்திரமுகி, அஜித்தின் பில்லா என டாப் ஹீரோகளுடன் படம் பண்ணி தன்னுடைய மார்க்கெட்டை வளர்த்துக் கொண்டார் அதன் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்ததால் தொட முடியாத உச்சத்தை எட்டினார்.
மேலும் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் சிம்பு, பிரபு தேவா போன்றவர்களை காதலித்து அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினார். ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட நயன்தாரா படங்களில் அதிகம் கவனம் செலுத்தினார் அப்படி நானும் ரவுடிதான்..
திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது இருவரும் ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றன அண்மையில் கூட தனது இரு குழந்தைகளின் முகத்தை காண்பித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
நயன்தாரா ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாரா 75, டெஸ்ட், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நயன்தாரா கடந்த காலத்தில் எப்படி இருந்தார் என்பது பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார் அவர் சொன்னது.. நயன்தாரா பிரபுதேவா மற்றும் சிம்புவை காதலித்த போது பார்ட்டி, பப், சரக்கு என சகல பழக்கத்திற்கு அடிமையாகி கிடந்தார்.
அவர் சிம்புவுடன் பார்ட்டியில் லூட்டி அடித்த போட்டோக்கள் கூட இணையதளத்தில் கசிந்து முகம் சுளிக்க வைத்தது இதனிடையே ஒரு கட்டத்தில் பிரபுதேவா, சிம்பு நயன்தாராவை கழட்டி விட்டார்கள். இதனால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கிடந்தார்.
பின்னர் விக்னேஷ் சிவன் அவரை சந்தித்து நட்பாக பழகினார் நயன்தாரா அந்த சமயத்தில் தண்ணி அடிக்கிற பழக்கம் எல்லாம் இருந்துச்சு பின்னர் விக்னேஷ் சிவன் தான் கொஞ்சம் கொஞ்சம்மாக எடுத்து சொல்லி நயன்தாராவை டோட்டலாக மாற்றி அவரை அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றார் என கூறினார்.