தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய் அஜித் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இன்று வரையிலும் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதன் பிறகு நடிகை நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்க ஆரம்பித்திருக்கிறது அதாவது திருமணத்திற்கு பிறகு பல சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் முதலில் நடிகை நயன்தாரா தனது குழந்தைகள் மூலம் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கிய இவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சம் அந்த சர்ச்சையை சமாளித்து வந்தார்.
அதான் பிறகு நடிகை நயன்தாரா சமீப காலங்களாக சரியான வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா ஒரு இயக்குனரின் கையால் அந்த விருதை வாங்கி இருக்கிறார்.
அப்போது அந்த இயக்குனரின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார் இதற்கு முன்பு நடிகை நயன்தாரா இவ்வாறு நடந்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் அதே மேடையில் அந்த இயக்குனரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
அதாவது இதற்கு முன்பு அவருடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பை தட்டி கழித்த நான் தற்போது அவருடைய படத்தில் நடித்து எப்படியாவது அவர் கையால் மறுபடியும் விருதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நாசுக்காக வாய்ப்பு கேட்டிருக்கிறார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.