தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது. இந்நிலையில் இவர்கள் கடந்த ஐந்து வருடமாக காதலித்து வருகிறார்கள்.
வெள்ளித்திரையில் தற்பொழுது இவர்கள் தான் ட்ரெண்டிங்கானா ஜோடியாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் ரவுடி பேபி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் குழாங்கள் என்ற திரைப்படத்தை இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் சூட்டிங் சென்றிருந்தார்கள். அங்கு இவர்கள் ரொமான்ஸ் செய்ய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை வைத்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் மோதிரம் இருந்ததால் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதோ என்று ரசிகர்கள் ஒருபுறம் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தை முன்னிட்டு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் இருந்து வருகிறது.இதோ அந்த புகைப்படம்.