நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள் இந்த நிலையில் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து வந்தார்கள் இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமணம் பல சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இவர்கள் திருமணத்தில் முக்கிய நபர்களும் கலந்து கொண்டார்கள் நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்தார்.திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்திற்கு தேனிலவுக்காக சென்றார்கள்.
இந்த நிலையில் அடுத்ததாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என்ன செய்யப் போகிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கடைசியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். தற்போது இணையதளங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஸ் சிவன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் netflixல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை கௌதம் மேனன் தான் டாக்குமெண்டரி ஆக இயக்கியுள்ளார். ஆனால் கௌதம் மேனன் இதுவரை அதைப் பற்றி எதுவும் கூறாமல் அடுத்த படத்தை இயக்குவதில் படு மும்முரமாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் போட்டோ ஷூட் நடத்தினார்கள் அப்போது சர்ச்சையை சந்தித்தார்கள் ஏனென்றால் காலில் செருப்பணிந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானது.
திருமணம் முடிந்ததும் நயன்தாரா மற்றும் விக்னேஸ்சிவன் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை வெளியிட்டார்கள் ஆனால் போகப்போக ஹனிமூன் சென்ற ரொமான்டிக் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சிங்கிள் பசங்களை சிதர விட்டார்கள். அதனால் சமூகவலைதளமே கிடுகிடுத்து போனது அந்த அளவு இருவரும் ரொமான்ஸ் செய்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் மாடர்ன் உடையில் பல புகைப்படங்களை வெளியே சிதர விட்டார் அதில் ஒரு புகைப்படத்தில் கூட தாலி மறைக்காமல் புது தாலியுடன் போஸ் கொடுத்திருந்தார் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக எந்த புகைப்படத்தை வெளியிடப் போகிறார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தாய்லாந்திலிருந்து ஹனிமூன் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஹோட்டலிலிருந்து ஊழியர்கள் வெளியே வந்து டாட்டா காட்டி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.