“ராக்கி” திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் – வெளியே கசிந்த கியூட் புகைப்படம்.

surya and jothika

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்கள் தன்னை மென்மேலும் வளர்த்துக் கொண்டு சினிமாவுலகில் நிறைய காசு பார்க்கின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் கைகோர்த்து நடிப்பது மற்றும் சோலோ படங்களில் நடித்து அசத்தி வருவதுமாக இருக்கிறார் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை நயன்தாரா தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஒரு சைடில் நடத்தி தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து நன்றாகவே காசு பார்க்கிறார்.

இதனால் இரட்டிப்பு காசுகளை அள்ளி வருகிறார் நயன்தாரா. அண்மையில் கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  தனது காதலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இவர்களே தயாரித்தனர் அதனைத்தொடர்ந்து ராக்கி என்ற திரைப்படத்தை ஏற்கனவே தயாரித்து இருந்தனர்.

அந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி அண்மையில்தான் வெளியாகியது. இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி மக்களை கூட்டம் கூட்டமாக கவர்ந்திழுத்து இந்த திரைப்படத்தை அண்மையில் ரஜினிகாந்துடன் பார்த்துவிட்டு புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் ராக்கி திரைப்படத்தை தயாரித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஒன்றில் உட்கார்ந்து பார்த்துள்ளனர்இருவரும் ஒரே மேட்ச்சாக டிரஸ் போட்டு வந்து பார்த்து தான் ஹைலைட். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

nayanthara and vignesh
nayanthara and vignesh
nayanthara and vignesh