தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக இருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் முதல் நடிகை நயன்தாரா தான்.
பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் இருக்கும் என்ற நிலைமையை மாற்றி ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். தொடர்ந்த ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா சமீப காலங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பெரும்பாலான திரைப்படங்களில் லீட் நடித்தவரும் நிலையில் சொந்த தயாரிப்பில் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து கடந்த ஆண்டு அனைவர் முன்னிலையிலும் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு திருமணமான நான்காவது மாதத்தில் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் தமிழ்நாட்டின் மருத்துவ அமைச்சர் வரையிலும் சென்றிருந்த நிலையில் அதனை நயன்தாரா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்பொழுது இவருடைய நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்த படத்தினை எடுத்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய சோசியல் மீடியாவில் நன்றியை கூறியிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள சாலையோர மக்களை சந்தித்து பரிசு பொருட்களை வழங்கியுள்ளார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.