Nayanthara- Vignesh Shivan: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல தொழில்கள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தற்பொழுது புதிய தொழில் ஒன்று ஆரம்பித்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. ஜவான் படத்தினை தொடர்ந்து நயன்தாரா தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு நயன்தாரா கோலிவுட் சினிமாவில் நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக இருந்து வரும் நிலையில் அதே போல் சினிமாவையும் தாண்டி பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்.
அந்த வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் துபாயில் நிறைய தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மேக்கப் சம்பந்தமான பொருட்களிலும் முதலீடு செய்து வரும் நயன்தாரா தானே அதற்கான விளம்பரங்களையும் வெளியிருக்கிறார். மேலும் இதனை அடுத்து இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.
இதை தவிர்த்து ரியல் எஸ்டேட், காபி ஷாப் போன்ற பல தொழில்களை செய்து வரும் இவர்கள் தற்பொழுது புதிய தொழிலில் பல கோடி முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றுக் கொண்டனர்.
மேலும் சமீபத்தில் நயன்தாரா தொழில்கள் சம்பந்தமான தேவைகளுக்காக இன்ஸ்டாகிராம் தொடங்கியுள்ளார். அப்படி டிவைன் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தில் நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினர் முதலீடு செய்துள்ளார்கள். இந்நிறுவனம் இயற்கை சார்ந்த உணவுகளை தயாரித்து வரும் நிலையில் இதில் முதலீடு செய்வது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டி வருகிறார் நயன்தாரா. இவ்வாறு படங்களில் நடிப்பதை விட பல தொழில்களின் மூலம் நல்ல லாபத்தை பெற்று வரும் நயன்தாரா தொழிலதிபராக கொடிகட்டி பறந்து வருகிறார்.