பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு மொழியில் மட்டும் நடிக்காமல் பாலிவுட், டோலிவுட், ஹோலிவுட் என பிற திரை உலகிலும் நடித்து சினிமாவில் பிரபலமடைவதை பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இருக்கும் இடத்தில் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகை நயன்தாரா.
தற்போது நடிகர்கள் வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை இவர்தான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவரின் விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தற்போது சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவருக்கும் ரோல்மாடலாக திகழ்கிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இன்னும் டப்பிங் வேலைகள் மட்டும் இருப்பதால் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறி உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து இவர் சோலோ ஹீரோயினாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் OTT வழியாக வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். எனவே இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலங்களாக நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவன் மற்றும் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் கொண்டிருந்த பிறந்தநாளில் பிக்பாஸ் சம்யுத்தாவும் பங்கேற்றுள்ளார். சம்யுத்தாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர் நடிகை நயன்தாராவின் தோழி என்பது தற்போது தெரியவந்துள்ளது.