தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக இருவரும் ஜுன் 9ஆம் தேதி சினிமா பிரபலங்களும் தன்னுடைய உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்கு விக்கி நயன்தாரா அழைப்பு விடுத்தது சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தான் என கூறப்படுகிறது. அதிலும் அவர்கள் 200 பேருக்கும் சரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன காரணம் விக்கி – நயன்தாரா கல்யாணம் OTT நிறுவனத்தின் கையில் வந்ததால் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கல்யாணத்தை தன் கண்ட்ரோல் பக்கம் முடித்துக் கொண்டது.
அந்த OTT தளம் சுமார் 25 கோடி விக்கி – நயன்தாரா ஜோடிக்கு கொடுத்தது. விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு அஜித் விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி போன்ற பிரபலங்களுக்கு பத்திரிக்கையை கொடுக்கும் பொழுது சில நிபந்தனைகளையும் சொல்லி உள்ளது அதாவது திருமணம் நடைபெறும் அரங்கம் உள்ளே தொலைபேசி அனுமதி இல்லை
உங்கள் தொலைபேசியை நுழைவு வாயிலில் இருக்கும் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சிறிது தூரத்திற்கு மேல் உங்கள் வாகனம் அனுமதி இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேட்டரி கார் மூலம் அங்கிருந்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் உள்ளே நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் புகைப்படமாக கூட வெளியே வந்துவிடக் கூடாது என முடிவெடுத்து இருந்ததாம்.
இந்த கல்யாணத்திற்கு அஜித் விஜய் போன்றவர்கள் வந்தால் ரசிகர்கள் இந்த கல்யாணத்தை மிகப்பெரிய அளவில் பார்ப்பார்கள் இதன் மூலம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளிவிடலாம் என கணக்கு போட்டது ஆனால் அஜித் விஜய் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இந்த கல்யாணத்தை புறக்கணித்துள்ளனர். பல சினிமா பிரபலங்கள் கூட விக்கி நயந்தாரா கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் கூட சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லவில்லை. அதேசமயம் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.