Nayanthara : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சரத்குமார் அவர்களுடன் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பேரும் புகழையும் பெற்றார் அதன் பிறகு சிம்புவின் வல்லவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், விஜய், சரத்குமார், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஆனால் நயன்தாரா இதுவரை கமலஹாசன் அவர்களுடன் இணைந்து நடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்திதான் அப்படி இருக்கும் நிலையில் கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் திடீரென கமலின் ராஜ் கமல் நிறுவனம் இந்த திரைப்படத்திலிருந்து பின்வாங்கியது ஆனால் அதே கூட்டணியில் தற்போது அந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது.
டிசம்பர் 8ம் தேதி நாளை வெளியாகும் 3 தமிழ் திரைப்படங்கள்.!
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் தான் நயன்தார நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது குடும்ப செண்டிமெண்ட் மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே விக்னேஷ் சிவனுக்கு ஏழரை தான் நடந்து கொண்டிருக்கிறது சினிமாவில்.
ஏனென்றால் அஜித் திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் பின்பு கமல் தயாரிப்பில் கமிட் ஆகி இருந்தார் ஆனால் அதிலிருந்தும் இவர் நீக்கப்பட்டுள்ளார் இப்படி அஜித் கமல் இருவரும் கைவிட்ட நிலையில் நான் இருக்கிறேன் என அரவணைத்துள்ளார் நயன்தாரா. ஆயிரம் தான் இருந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கு ஏற்ப விக்னேஷ் சிவனை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நயன்தாரா இப்படி அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
50 வயதிலும் குறையாத கவர்ச்சி.. ஸ்லீவ்லெஸ் புடவையில் நடிகை கஜோலின் ஹாட் போட்டோ ஷூட்
நயன்தாரா பாலிவுட்டில் கால் தடம் பதித்து முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்படி திடீரென அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதால் இவரின் கேரியர் பாதிக்கப்படுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.