Actor Santhanam: நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படம் ரிலீஸ்சான நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் ப்ரோமோஷனில் கலந்துக் கொண்டு ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் இரு தினங்களிலேயே 6 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்டி வருகிறது.
சின்னத்திரையின் காமெடி ஷோக்களின் மூலம் தனது கேரியரை தொடங்கிய சந்தானம் பிறகு படிப்படியாக வாய்ப்புகளைப் பெற்று சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் சிறப்பான அறிமுகத்தை பெற்றார். இதனை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அப்படி காமெடியனாக ரசிகர்களை கவர்ந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கியதால் ரசிகர்களுக்கு மிகவும் அப்செட்டாக இருந்தது. சமீப காலங்களாக தான் இவருடைய திரைப்படங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 28ஆம் தேதி சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்த படத்தினை பிரேம் ஆனந்த் இயக்க சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெட் இன் கிங்ஸ்லி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். வெளியான இரு தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 6 கோடியை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கேரக்டரிலும் நடிக்க முடிவெடுத்திருக்கும் நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் கூட்டணியில் உருவாக இருந்த ஏகே62 திரைப்படத்திலும் சந்தானம் கமிட்டாக இருந்தார். அதில் இவருடைய கேரக்டர் சிறப்பாக அமைந்ததாக அவரே கூறினார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் ட்ராப்பானது இதற்கிடையில் இந்த படத்தின் கதையை கூறுவதற்காக சந்தானத்தை தன்னுடைய வீட்டிற்கு விக்னேஷ் சிவன் அழைக்க தடபுடலாக விருது ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து பேசிய சந்தானம் சந்தானம் வல்லவன் படத்தில் இருந்து தனக்கும் நயன்தாராவுக்கும் சிறப்பான ரிலேஷன்ஷிப் இருந்து வருகிறது. என்னை நயன்தாரா அண்ணன் என்று தான் அழைப்பார் நானும் தங்கை என்றுதான் அழைப்பேன். நயன்தாரா எனக்கு கூட பிறக்காத தங்கை அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது கூட குழந்தைகளிடம் மாமா வந்திருக்காங்க பாருங்க எனக் கூறினாராம்.
அதற்கு சந்தானம் என்னம்மா குழந்தைகளுக்கு என்னுடைய மடியில் வைத்து தான் காது குத்துவியா எனக் கேட்க அதற்கு நயன்தாராவும் கண்டிப்பாக என்று சொன்னாராம். எனவே அந்த குழந்தைகளை தாய்மாமன் சீர் நான் தான் செய்ய வேண்டும் என சந்தானம் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.