சமந்தாவை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க திட்டம் போடும் நயன்தாரா.? முழு பிசினஸ் மேன்னாக மாறிய லேடி சூப்பர்ஸ்டார்

Nayanthara
Nayanthara

Nayanthara : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணுவது, சோலோ படங்களில் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அதனை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கைவசம் டெஸ்ட், நயன்தாரா 75 போன்ற படங்களிலும் நடிக்க உள்ளார்.

சினிமா உலகில் படும் பிஸியாக ஓடும் நயன்தாரா ஒரு படத்திற்கு குறைந்தது 4 கோடியிலிருந்து 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் இருந்தாலும் பிசினஸ்வரிலும் தற்பொழுது ஆர்வம் காட்டி வருகிறார் பல்வேறு பெரிய நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ள நயன்தாரா தற்பொழுது 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை ஓபன் செய்துள்ளார்.

டீக்கடை ஒன்றை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாரா சமந்தாவுக்கு பரிசு பொருள் ஒன்றை கொடுத்துள்ளார் அது வேறு எதுவும் அல்ல.. தான் தயாரித்த 9 ஸ்கின் பொருளை சமந்தாவுக்கு கொடுத்துள்ளார்.

இது குறித்து சமந்தா தனது instagram பக்கத்தில் இந்த பொருட்களை பயன்படுத்த ஆவலாக உள்ளேன் 9 ஸ்கின் தி ஆல் தி வெரி பெஸ்ட் எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஒத்த பைசா காசு செலவு பண்ணாமல் 9 ஸ்கின் பிரமோஷன் பண்றீங்க எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். சமந்தாவும் நயனும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ஏற்கனவே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.