தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர்ஸ்டார் என்ற கௌரவத்துடனும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய சொந்த வாழ்க்கையின் மூலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் இவருடைய முதல் காதல் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவதாக பிரபல நடன இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார் ஆனால் அந்த காதலும் தோல்வியடைந்த பிறகு பிரபல திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார்.
இவ்வாறு இருவரும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஊர் சுற்றுவது புகைப்படம் வெளியிடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் வெகுகாலமாக லிவிங்டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஆனால் நடிகை நயன்தாரா எப்பொழுதும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மிக ஆர்வமாக இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்களோ நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வாரா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் துபாய்க்குச் சென்று கொண்டாடி உள்ளார்கள் அப்பொழுது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் வெளியிடும் பொழுது விக்னேஸ்வரன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22 2 2022 இதே தேதியில் அனைவரும் திருமணம் செய்து கொள்ள முயற்சித்து வருகிறார்கள் ஆனால் அந்த தேதியை நானும் வீணாக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வாறு விக்னேஷ்சிவன் வெளியிட்ட பதிவால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.