சண்டை போடாம அமைதியா இருந்தா 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம்.! திகிலுடன் வெளியானது நயன்தாராவின் O2 பட டீசர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா மட்டும் தான். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல்  90s காலகட்டத்தில் இருந்து தற்போது வரைக்கும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் சமந்தா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர்களுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

இதற்கு முன்பு நயன்தாரா அவர்கள் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேகான காட்பாதர் திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும்  லயன் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்க உள்ளார் நடிகை நயன்தாரா. மேலும் நயன்தாரா நடிப்பில் பிரேமம் பட இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் நடித்து வரும் கோல்ட் படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் O2 என்ற திரைப்படத்தில்  முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பாபு தயாரித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகர் அவர்கள் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் கிரிபிரசாத் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

நயன்தாராவின் O2 திரைப்படம் விரைவில் நேரடியாக ஹாஸ்டாரில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் O2 திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு  வெளியாகும் என கூறி இருந்தார்கள் அதேபோல் இன்று டீஸறும்  வெளியாகியுள்ளது.

Leave a Comment