லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தன.
ஒரு வழியாக தனது நீண்ட நாள் காதலன் விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். கேரளா திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அதனால் இயக்குனர் அட்லி இடம் திருமணம் முடிந்த கையோடு ஒரு சில நாட்களில் ஷூட்டிங் வந்துவிடுகிறேன் என சொல்லி இருந்த நயன்தாரா தற்போது தாய்லாந்துக்கு சென்று ரொமான்ஸ் செய்து வருவதால் ஜவான் படக்குழு கொஞ்சம் கோபமாக இருக்கிறது.
மேலும் அட்லி ஷாருக்கானின் கால்ஷீட் வீணாக போகிறது என டென்ஷனாக இருக்கிறார். இந்நிலையில் ஷாருக்கான் கூலாக வேறு ஹீரோயினை மாற்றிவிடலாம் என சொல்லி பதான் பட ஹீரோயின் தீபிகா படுகோனை நடிக்க வையுங்கள் என சொல்லி உள்ளாராம்.
இயக்குனர் அட்லி தீபிகா படுகோனின் கதைக்கு நான் எங்கே செல்வது என தெரியாமல் எப்படியோ மேச் செய்து தீபிகா படுகோனின் போஷன் கள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இயக்குனர் அட்லி நயன்தாராவிற்கு போன் செய்து சீக்கிரம் வந்துவிடுமா இல்லை என்றால் படத்தின் கதை வேற மாறி மாறி விடும் என சொல்லி உள்ளார்.