தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக ஓடிக் கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் நடிப்பில் கடைசியாக உருவான கனெக்ட் திரைப்படம் அண்மையில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு காரணம் இவர் இந்த படத்தில் நடித்ததுடன் மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். அதனால்தான் இவர் கலந்து கொண்டார் என பலரும் கூறினார் ஆனால் அவர்கள் சொல்லுவது போலவே தான் இவர் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் இவர் பிரமோஷன் செய்கிறார்
மற்ற படங்களின் ப்ரொமோஷனுக்காகவோ அல்லது மற்ற இதுக்குமே நயன்தாரா கலந்து கொள்ளவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா குறித்து பேசி இருக்கிறார். பத்திரிக்கையாளர்களை சந்திக்க நயன்தாரா பயப்படுகிறார். ஆடியோ லான்ச் கூட கனெக்ட் படத்திற்கு நடக்கவில்லை.
ஒரு நடிகை என்றால் எதையும் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பல பிரச்சினைகளை சந்திக்கும் நயன்தாரா ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார். ஆரம்பகாலத்திலேயே நான் அவரிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறேன் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தயவு தேவை.
பத்திரிக்கையாளர்கள் தயவு இல்லாமல் எந்த நடிகையும் வளர முடியாது. ஐயா படத்தில் நடிக்கும் போது எவ்வளவு தைரியமாக இருந்தீர்களோ அதே போல இப்பொழுதும் நடந்து கொண்டால் நல்லது என கூறி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.