பிரபல நடிகை நயன்தாராவுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களிலேயே டிஜார்ஜ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்துடன் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடாமுயற்சியின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் சில மாதங்களுக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் திருமணம் செய்து கொண்டார்கள்.இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு சில மணி நேரங்கள் சிகிச்சை பெற்று நிலையில் மருத்துவர்கள் அவரை டிஜார்ஜ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானாலும் இது குறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாக இருக்கிறது மேலும் சமீபத்தில் கிளிப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இருவரும் திருமணத்திற்கு பிறகு கோவில்கள், ஹனி மூன் என சுற்றி வந்த நிலையில் தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான பணியை மிகவும் விறுவிறுப்பாக பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா தற்பொழுது ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.