தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் விக்னேஷ் சிவனை வெகு காலமாக காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்ற என்ற கேள்வியை ரசிகர்களிடம் அதிக அளவு கேட்கப்பட்டது மட்டுமில்லாமல் தற்போது இவர்களுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் இவருடைய திருமணம் ஜூன் 9ஆம் தேதி திருப்பதி கோயிலில் நடைபெற உள்ளதாக வெளிவந்தது ஆனால் தற்போது இந்த திருமணமானது மகாபலிபுரம் 5 ஸ்டார் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடக்க உள்ளதாக கூறி உள்ளார்கள் மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் நடக்கவிருந்த திருமணம் ஏன் மாற்றப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது ஏனெனில் திருப்பதியில் திருமணம் செய்தால் 150 நபர்களுக்கு மேலாக அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது என கூறியதன் காரணமாக தான் இந்த திருமணம் தற்போது பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
ஏனென்றால் நயன்தாராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மட்டும் இல்லாமல் அவர் தமிழ் மொழியை மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து வருகிறார் இந்நிலையில் அவர் சில முக்கிய விருந்தினர்களை கூப்பிட்டால் கூட அவர்களுடைய திருமணத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் அலைமோதும்.