சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் விக்னேஷ் சிவன் தொடர்ந்த சில திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நானும் ரவுடி தான்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மாறிய இவர் இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே பாலாஜி போன்ற ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதையை சில வருடங்களாகவே உருவாக்கி வைத்துக்கொண்டு பல நடிகர்களிடம் கதை கூறி இந்த படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகர்கள் இந்த படம் மிகவும் காமெடியாக இருப்பதாகவும் இன்னும் சீரியஸான கதை ஏதாவது இருந்தால் தருமாறும் கேட்டிருக்கிறார்கள் அதன் பிறகு கடைசியாக விஜய் சேதுபதியிடம் கதையை கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி கதை முக்கியமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு தர வேண்டுமென முடிவெடுத்தாராம். அதேபோல் நயன்தாராவை சந்தித்தும் கதை கூறிய நிலையில் பிறகு இவர்களுக்கு பிடித்துப் போக இதனால் படப்பிடிப்பு வேலைகளை விக்னேஷ் சிவன் தொடர்ந்து உள்ளார்.
இவ்வாறு பலரும் நிராகரித்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிகை நஸ்ரியா தான் நடிக்க திட்டமிட்டு இருந்தாராம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கூற அதன் பிறகு தான் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்ததாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வாறு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்த படத்தின் மூலம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகவும் மாறி உள்ளார்.