பணம் இருந்தா எதை வேணாலும் செய்யலாம் என நிரூபித்த நயன்தாரா.! சிக்கலில் இருந்து எஸ்கேப்பாக உடனே ரெடி ஆகிய சர்டிபிகேட்

nayan-wiki
nayan-wiki

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இவர்கள் மீது வாடகை தாய் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து இருந்தாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் இவர்கள் பதிவுச் சான்றிதழ் அளித்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பே எங்களுக்கு பதிவு திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவும் வாடகைத்தாய் குறித்து வெளியான தகவல் அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 15 நாட்களாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறை அதிகாரிகள் திடீரென இவர்கள் சான்றிதழ் அளித்ததால் எப்படி சாத்தியமானது என்று ஒரு பக்கம் குழம்பி வருகின்றனர். ஏனென்றால் 15 நாட்களாக சென்னையில் அவர்களுடைய வீட்டில் முடங்கி கிடந்த நிலையில் தங்களுடைய வழக்கறிஞரை வைத்து பணத்தின் மூலம் சான்றிதழ் வாங்கி தமிழக அரசின் வாயை அடைத்ததாக கூறப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் ஊடகங்களில் நயன்தாரா விக்கி செய்திகள் பரவி வந்த நிலையில் இத்தனை நாட்களாக வீட்டில் முடங்கி கிடந்து விட்டு திடீரென சான்றிதழ் எப்படி அவருக்கு வழங்கப்பட்டது அப்போ பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு கேள்வி தற்போது இணையத்தில் வலம் வருகிறது.

இதனால் நயன்தாரா மீது செம கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது அவர் மேல் உள்ள கோபம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது ஏனென்றால் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்த நயன்தாரா இப்படி செய்துவிட்டார் என்ற ஒரு ஆதங்கத்தில் இருக்கிறார்களாம் ரசிகர்கள் அதுமட்டுமல்லாமல் இவருடைய லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பறிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதை அனைத்தும் முன்கூட்டியே சொல்லியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறி வருகின்றனர். இவர்கள் எல்லாத்தையும் மூடி மறைத்து விட்டு திடீரென நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டோம் என்று சான்றிதழை கொடுத்தால் ரசிகர்கள் கோபப்படாமல் என்ன செய்வார்களாம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.