லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டவர். ஒரு கட்டத்தில் நயன்தாரா சோலோ படங்களிலும் நடித்து வந்தார் அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனால் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்
அதனால் தற்போது கமிட் ஆகும் படங்களில் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் முக்கிய ஒருவராக நயன்தாரா பார்க்க பட்டு வருகிறார். வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நயன்தாரா படங்களின் மூலம் பல கோடியை சம்பாதித்து வருகிறார்.
அதனால் தனது நீண்ட நாள் காதலன் விக்னேஷ் சிவன் உடன் சமீபத்தில் நயன்தாராவிற்கு மிக விமர்சியாக திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தை மிக க்ராண்டாக நடத்தியதால் பல கோடி செலவாகி இருக்கும். மேலும் திருமணம் முடிந்த பிறகும் இருவரும் தனியாக தாய்லாந்திற்கு சென்றனர்.
இப்படி எதற்கு எடுத்தாலும் கோடி கணக்கில் தான் செலவு செய்கிறார் நயன்தாரா எனக் கூறப்படுகிறது. நயன்தாரா எங்கு சென்றாலும் தனி விமானத்தில் தான் செல்கிறார். இந்த நிலையில் நயன்தாராவிற்கு கை கடிகாரம் ரொம்ப பிடிக்குமாம். இப்பொழுது அவர் கையில் இருக்கும் கை கடிகாரத்தின் விலை 1.20 கோடி மதிப்புடையது என சொல்லப்படுகிறது.
இதுபோல் விலை உயர்ந்த கடிகாரங்கள் 120க்கு மேல் வாங்கி வைத்துள்ளாராம். நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் கை கடிகாரம் வாங்கிடுவாராம். அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அதில் வேலை செய்த பலருக்கும் கைகடிகாரம் வாங்கி கொடுப்பதும் வழக்கமாம். இப்பொழுது கூட நடிகை நயன்தாரா போயஸ் கார்டர்ன் அப்பார்ட்மெண்டில் இரண்டு தளங்களை வாங்கி உள்ளார்.
அந்த வீட்டின் உட்புற அழகிற்கு மட்டும் 25 கோடி குளியலறை 1500 சதுர அடி அந்த பாத்ரூமில் ஒரு ஸ்விம்மிங் ஃபுல் என அந்த வீட்டிற்காக பல கோடியை செலவு செய்து வருகிறார். இப்படி எதற்கெடுத்தாலும் விக்கி நயன்தாரா ஜோடி கோடி கணக்கில் செலவு செய்கின்றன ஓவர் பந்தா காண்பிக்கின்றனர் என ஹாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.