லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.

nayanthara
nayanthara

சினிமா உலகில் தனது பயணத்தை ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரையிலும் உச்ச நட்சத்திரங்கள் உடன் மட்டுமே நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் டாப் ஹீரோக்களின் படங்கள் மற்றும் சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை அள்ளுகிறார்.

இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் கை கோர்த்தது அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதனைத் தொடர்ந்து தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் கை கோர்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காட்பாதர் என புதிய படங்கள் பலவற்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா சினிமாவுலகில் படங்களை தயாரிப்பது மற்றும் பல்வேறு பிசினஸில் முதலீடு செய்து அசத்தி வருகிறார்.

இதனால் நயன்தாராவின் சொத்து மதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது இப்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 4 கோடியில் இருந்து 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது அண்மைக் காலமாக நாம் சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்களை வெளியிடுகிறோம்.

அதுபோல தற்போது நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 60 லிருந்து 70 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.