கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் இவர் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து காற்றுவாக்கில் 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் நடிப்பை விட சமந்தாவின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நயன்தாரா முகத்தில் குழிகள் விழுந்து வயதான தோற்றத்துடன் இருப்பதாகவும் சமந்தாதான் இளமையான தோற்றத்தில் இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் திடீரென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என பலரும் கூறி வருகிறார்கள். விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் லால்குடி இவர் சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி என்ற தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா விக்னேஷ் சிவன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனால் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் என்பவருக்கு குழந்தையை கிடையாது அதனால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யாவை தங்களுடைய குழந்தை போல் வளர்த்து வந்தார்கள் ஆனால் இவர்கள் பணி நிமித்தம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய் மற்றும் தந்தை ஆயிரத்து 970 ஆண்டு சென்னைக்கு வந்து விட்டார்கள். மாணிக்கம் லால்குடியிலேயே இருந்தார்.
மேலும் அவர் பெரியப்பா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் அவர் கூறியதாவது விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் தங்களுடைய குடும்பத்திற்கும் பெரிதாக தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு கூட தங்களை அழைக்கவில்லை என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்ளப்போகும் நிலையில் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பையும் கூறவில்லை எனவும் இது மிகவும் மன உளைச்சல் ஆக இருப்பதாகவும் மாணிக்கம் வருத்தத்துடன் கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும் விக்னேஷ் சிவன் தான் வளர்த்த மகன் என்பதால் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.