தமிழ் சினிமா உலகில் நடிகர்களுக்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்பொழுது பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் மற்றும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் தற்போது பிசியாக நடித்துவருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை பல லட்சம்பேர் சமூக வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா போலவே இருக்கும் ஒரு பெண் சமீபத்தில் டிக் டாக் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பெண் மேக்கப் போட்டுக் கொண்டு அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்களும் அச்சு அசலாக நீங்கள் நயன்தாரா போலவே இருக்கிறீர்கள் என்று கூறி அத்தகைய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இது அந்த புகைப்படம்.