சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவது வழக்கம்.
நயன்தாரா அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்துள்ளார். இவர் கடைசியாக பிகில் மற்றும் தர்பார் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து நடித்து வருகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் படத்தில் நடிக்க உள்ளார் என்பது தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது இப்படத்தில் கவர்ச்சி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். நயன்தாராவுடன் யாஷிகா இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 168வது படத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை தொடர்ந்து அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்க்க உள்ளார். இப்படத்தின் இயக்குனர் இவரது காதலரான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நயன்தாரா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி 168 படத்தில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையம் சென்ற பொழுது அவரது ரசிகர்கள் அவர்களுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துக்கொண்டார் இப்புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
தலைவரின் 168 படம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது இதில் பங்கேற்க நயன்தாரா அங்கு சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.