கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தை பற்றி தான். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் அண்மையில் மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
மகாபலிபுரத்தில் பிரபல ஹோட்டலில் தடபுடலான விருந்துடன் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி,சரத்குமார்,விக்ரம் பிரபு உள்ளிட்ட இன்னும் ஏராளமான பிரபலங்கள் ஒன்றிணைந்து இவர்களை வாழ்த்தினர்.
இவ்வாறு திருமணத்தை முடித்த கையோடு திருப்பதி சென்றார்கள். அங்கு ஏழுமலையான் கோவில் முன்பு இருவரும் ஜோடியாக போட்டோ ஷூட் நடத்தினர். மேலும் நயன்தாரா கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி கோவில் அதிகாரிகளிடம் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து மதியம் விருந்து வைத்தனர். அவ்வப்பொழுது நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்ட இவர்கள் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் திடீரென்று பத்திரிக்கையாளர் ஒருவர் எப்பொழுது ஹனிமூன் என திடீரென்று கேட்டார்.
மேலும் எங்க போக போரீங்க என கேட்டதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விக்னேஷ் சிவன் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு நயன்தாரா மைக்கை வாங்கி கண்டிப்பாக போவோம் என்று வெட்கப்பட்டு சிரித்து கொண்டே சொல்லி உள்ளார்கள்.