உலகம் முழுவதும் தற்போது 2021 ஆம் ஆண்டின் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அந்தவகையில் சினிமா பிரபலங்கள் பலரும் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள்,வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.மேலும் இந்த வருடமாவது மக்களுக்கு நல்ல வருடமாக அமைய வேண்டும் என சினிமா பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சினிமாவில் உள்ள ஒரு காதல் ஜோடி புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்த காதல் ஜோடிகள் வேறு யாருமில்லை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தான் இவர்கள் 2 பேரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
பொதுவாகவே இவர்கள் 2 பேரும் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கங்களில் கூறிவருகிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.