நயன் – விக்கி வாடகைத்தாய் சர்ச்சை.! வெளுத்து கட்டிய வனிதா விஜயகுமார்…

nayan-wiki
nayan-wiki

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தேர்ந்தவர் நடிகை நயன்தாரா இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டலில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் தற்போது மாற்று தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மாற்றுத்தாய் மூலம் எப்படி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்  என பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக திருமணமாகி 5 வருடங்கள் கழித்து தான் மாற்றுத்தாய்  மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விதிமுறைகளை மீறினார்கள் என பல கேள்விகள் எழுந்துள்ளது.

இப்படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது பல விமர்சனங்கள் எழுந்து உள்ள நிலையில் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். அதாவது முட்டாள்கள் செய்வதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களை வாழ்த்தி உள்ளார்.

வனிதா விஜயகுமார் பொதுவாகவே தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படையாக பேசி பல சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு ஆதரவாக பேசும் வகையில் இந்த ட்விட்டரை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.