திருமணம் நல்லபடியாக முடிய திருச்சி குலதெய்வ கோவிலில் பிராத்தனை செய்த நயன் விக்கி.! வைரலாகும் வீடியோ .!

vignesh shivan
vignesh shivan

விக்னேஷ் சிவன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள்  குவிந்து இருக்கிறார்கள். விக்னேசிவன்  திரைப்படம் என்றாலே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம்  வெளியானது. அந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை  பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள்.

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலுக்கு  சென்று பொங்கல் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்த விஷயம்தான். மேலும் இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் நெற்றிக்கண் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போது அங்கே இருந்தவர்கள் விரலில் இருக்கும் மோதிரத்தை பற்றி கேட்டனர்.

மேலும் அதற்கு நடிகை நயன்தாரா  விக்னேஷ் சிவனுக்கும் எனக்கும் நடந்த நிச்சியத்தார்த்த  மோதிரம் என்று பதிலளித்தார். நாங்க நிச்சியத்தை  யாரிடமும் சொல்லவில்லை ஆனால் கல்யாணத்தை அனைவரிடமும் சொல்லி தான் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினார்.

திருச்சியில் குலதெய்வக் கோயிலுக்கு பொங்கல் வைக்க வந்தபோத ரசிகர்கள் அனைவரும் அந்த கோவிலில் குவிந்த விட்டார்கள்.  உங்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் கேட்டுள்ளார்கள்.அந்தக் கோவிலில் பொங்கல் வைக்க வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும்  வைரலாகி வருகிறது.