திரை உலகில் பயணக்கும் பலர் காதலித்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவர் இவர் நானும் ரவுடி தான்..
திரைப்படத்தின் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். அதன் பிறகு தொடர்ந்து இந்த ஜோடி ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இந்த ஜோடி சினிமா வாழ்க்கை என இரண்டையும்..
பிரித்து நேரத்தை ஒதுக்கி சூப்பராக வலம் வந்தது இப்படி ஓடிக்கொண்டிருந்த ஜோடி. அண்மையில் கூட படப்பிடிப்பை அனைத்தையும் முடித்துவிட்டு விக்கி – நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகின. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த ஜோடி தற்பொழுது திடீரென ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது .
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்த நிலையில் விக்கி தனது சோசியல் மீடியாவில்.. இரட்டை ஆண் குழந்தைகளோடு நயன் – விக்கியும் இருக்கிற மாதிரியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சில பதிவுகளை போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது நானும் – நயனும் அம்மா அப்பாவாக ஆகிவிட்டோம் என்றும்..
எங்களை அனைவரும் வாழ்த்துங்கள் என்றும் இனி இவர்கள் தான் எங்கள் உயிர், உலகம் என்றும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகிய உங்களுக்கு நாலு மாசம் தான் ஆகுது எனக்கூறி ஷாக்கி இருக்கின்றனர். இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு இன்னும் வைரலாகி வருகிறது.