நவரச நாயகன் கார்த்தியின் முதல் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

karthik

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் அந்த வகையில் பல நடிகர்கள் தங்களுடைய திறமையை வைத்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படிதான் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக்.

இவர் சென்னையில் பிரபல கல்லூரியில் பிஏ படித்து வந்தார் பின்பு பாரதிராஜாவின் உதவியால்  நடிகராக கால் தடம் பதித்தார். கார்த்தி நடிப்பில் வெளியாகிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கே பாலச்சந்திரன்,  பாரதிராஜா, பி வாசு, கே வி ஆனந்த், சுந்தர் சி, உதயகுமார் என பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நவரச நாயகன் கார்த்திக் 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு 1992 ஆம் ஆண்டு அவரின் தங்கை ரதி என்பவரையும் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தற்போது மூன்று மகன்கள் இருக்கிறார் இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தற்பொழுது சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

பல சினிமா பிரபலங்கள் அன்னையர் தினத்தில் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களை வெளியிட்டு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் சமீபத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த வகையில் தற்பொழுது கௌதம் கார்த்திக் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

karthik
karthik

இதைப் பார்த்த ரசிகர்கள் இவரா உங்களுடைய அம்மா இவ்வளவு அழகாக இருக்கிறாரே ஹீரோயின் மாதிரி என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.