லாக் டவுனிலும் சூர்யா விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான தகவல்.!

surya and vijay sethupathi1
surya and vijay sethupathi 1

இதுவரையிலும் தென்னிந்திய சினிமாவில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்று எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தற்போழுது வெளிவந்துள்ளது பொதுவாக இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த இருந்தாலே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் 9 நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

அந்தலாஜி திரைப்படமான நவரசா திரைப்படம் தான் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மற்றும் சூரியா இருவரும் நடித்து வருகிறார்கள். எனவே இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு இருந்து வருகிறது.

இத்திரைப்படம் ஒன்பது தனித்தனி கதைகளை வைத்து இந்த தொடரை உருவாக்கியுள்ளார்கள்.  இத்திரைப்படம் மணிரத்தினம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இவரைத் தொடர்ந்து அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார்,  கௌதம் மேனன், ஹலிதா ஷமீம்,  கார்த்திக் சுப்புராஜ் பொன்ராம் மற்றும் ரதீந்திரன்,  ஆர் பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இணைந்து 9 எபிசோடுகளாக உருவாக்கியுள்ள தொடர்தான் நவரசா எனும் அந்தலாஜி தொடர்.

இவ்வாறு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களைத் தொடர்ந்து சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, பாபி சிம்ஹா,  பிரகாஷ்ராஜ்,கௌதம் கார்த்திக், அசோக்செல்வன், விக்ராந்த், ரோபோசங்கர் மற்றும் நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று இணைந்து நடித்துள்ளார்கள்.

எனவே இந்த வெப் சீரியலுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் பெரும் ஆவலாக காத்து வருகிறார்கள். இந்நிலையில் படக்குழுவினர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதாவது இந்த தொடரின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம் புரோடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அதோடு இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.