Kanguva: நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பை தூண்டியது.
அப்படி சூர்யாவும் தரமான சிறப்பான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வித்தியாசமான கேரக்டர்களில் பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்திலும் மிரட்டி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று சிறப்புடன் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் கிளிப்ஸ் வீடியோக்களை வருகின்ற 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி வெளியிடலாம் என படக் குழுவில் முடிவு செய்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க 3d முறையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
எனவே இதற்காக சூர்யா பல வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கலைக்களத்தை கொண்டு உருவாகி இருப்பதாக சிவா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனை அடுத்து தற்பொழுது ஞானவேல் ராஜா சமீப பேட்டியில் பிரபல நடிகர் நட்டி நடராஜ் இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடித்துள்ளாராம்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவிற்கு அதிகமான வில்லன்கள் உள்ள நிலையில் நடராஜ் அதில் ஒருவர் எனவும் கூறி இருக்கிறார். இவ்வாறு சூர்யாவிற்கும் நடராஜிக்கும் இடையில் மிகப்பெரிய பைட் சீன்கள் உள்ளதாகவும் இதன் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.