இன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களை பல முன்னணி பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர் அந்த வகையில் தமிழ்சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் பயணித்து வருபவர் நட்டி என்கின்ற நட்ராஜ் சுப்ரமணியம் அவர்கள் தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிஉள்ளார் மேலும் தளபதி விஜய் அவர்களை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது. விஜய் அவர்கள் ஷூட்டிங் செட்டுக்குள் வந்தவுடன் எல்லோருக்கும் விஷ் பண்ணிட்டு தான் தன் வேலையை தொடங்குவார் மேலும் அந்த செட்டில் யாராவது சோகமா இருந்தாங்கன்னா அவங்க அசிஸ்டன்ட் கூப்பிட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு நம்மளால ஏதாவது ஹெல்ப் பண்ணமுடியுமா என்று நினைப்பார் நடிகர் விஜய். தன்னுடைய செட்டில் இருக்குறவங்களை தனது சகோதரர்கள் மாறி பார்த்துக் கொள்வார்.விஜய் சினிமா உலகில் இருந்துகொண்டு பலருக்கும் தெரியாமல் பல விஷயங்களை செய்து வருகிறார் நல்ல மனிதர்.
நாங்கள் புலி படத்தின் ஒரு சில காட்சிகளை கேரளாவுல ஷூட் பண்ணினோம் தமிழ்ல அவருக்கு அதிக ரசிகர்கள் இருப்பது நமக்கு தெரியும் அதே அளவு கேரளா அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் ஒரு நாள் காலையில ஷூட்டிங் போகும் போது அவர் காருக்கு பின்னால் முன்னாலயும் 100 பைக் போகும் நமக்கு பார்க்கும் போது யாராவது மோதிக் கூடாது என்று பயமாய் இருக்கும் ஒருநாள் திடீரென நடுரோட்டில் காரை நிப்பாட்டிப் விஜய் இறங்கிவிட்டார்.
ரசிகர்களை கூப்பிட்டு நீங்கள் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் நன்றி நீங்கள் வண்டி ஓட்டுடிட்டு வரத பார்த்தா பயமாயிருக்கு உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா வீட்டில் எப்படி பயப்புடுவாங்கள் என்று அட்வைஸ் பண்ணினார் அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர் அந்த சம்பவம் மாறக்க முடியாத ஒன்று எனகூறினார் மேலும் பர்த்டே வாழ்த்துக்கள் விஜய் என கூறி வாழ்த்தி கூறினார்..