சினிமாவில் ஒரு சில நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப் பெரிய நடிகனாக வலம் வருகிறார்கள் அதேபோல் ஒரு சில நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போன நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் நாட்டாமை.
இந்த திரைப்படத்தில் சரத்குமார் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பு, மீனா, மனோரமா, அரவிந்த, கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம் ராணி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் பெத்தராயுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் செய்யப்பட்டது தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு, விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த இருந்தார்கள். சரத்குமார் நாட்டாமை திரைப்படத்தில் ஊர் நாட்டாமையாக நடித்திருந்தார் அவரின் நீதிக்கு அனைவரும் தலை வணங்குவார்கள்.
அவருக்கு இரண்டு தம்பிகள் ஒரு தம்பி மற்றொரு சரத்குமார் இன்னொரு தம்பி ராஜா ரவீந்தர் இவர்கள் இருவரும் அண்ணனுக்கு மிகவும் கட்டுப்பட்டு நடப்பார்கள். சரத்குமார் குடும்பத்திற்கும் பொன்னம்பலம் குடும்பத்திருக்கும் நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது அதனால் பொன்னம்பலம் வைத்த சூழ்ச்சியால் சரத்குமர் தவறான தீர்ப்பை வழங்கி விடுகிறார் அதனால் சாரத்குமார் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
தனது தம்பிக்கு தவறான தீர்ப்பை அளித்ததை நினைத்து இறந்துபோன சரத்குமார். அதிலிருந்து எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்புவும் மீனாவும் நடித்திருப்பார்கள். மேலும் இந்த நாட்டமை திரைப்படத்தை ஆர்பி சவுத்ரி அவர்கள் தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு சிற்பி இசை அமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் சரத்குமாரின் இரண்டாவது தம்பியாக நடித்தவர் தான் ராஜா அரவிந்த். இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அந்த திரைப்படத்தில் அவ்வளவு எளிமையாக இருந்தார் அவரா இப்படி இருப்பது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.