பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆகிய திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். மேலும் எஸ்பிபி அவர்கள் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
எஸ் பி பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஹிந்தியில் ஆறு சிறந்த பின்னணி பாடல்களுக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் கன்னட அரசு விருதுகளை பெற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியதற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இவரை அனைவரும் பாடும் நிலா என்று அன்போடு அழைக்கப்பட்டார் பாலசுப்பிரமணியம் அவர்கள் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் கோவிட் 19 தோற்றினால் பாதிக்கப்பட்டு காலமானார். இன்நிலையில் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தேசிய விருது பெற்று தந்த பாடல்களை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார் அதில் இவர் முதல் முதலாக தெலுங்கு திரைப்படமான சங்கராபரணம் என்ற படத்தில் இடம்பெற்ற ஓம்கார என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார். இதுவே அவருக்கு முதல் முதலாக கிடைத்த தேசிய விருது.
அதன் பிறகு ஏக் துஜே கே லியே என்ற படத்தில் இடம்பெற்று இருந்த தேரே மேரே ஹிந்தி பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சாகார சங்கமம் – வேதம் என்ற தெலுங்கு பாடலுக்கும், ருத்ர வீணா- செப்பாலானி என்ற தெலுங்கு பாடலுக்கும், சங்கீதா சகார – உமந்து என்ற கன்னடம் பாடலுக்கும் மின்சார கனவு – தங்கத்தாமரை என்ற தமிழ் பாடலுக்கும் தேசிய விருதை வாங்கி குவித்துள்ளார் பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம்.