தேசிய விருதுகளை தட்டிச் சென்ற தெலுங்கு படங்கள்.. புறக்கணிக்கப்பட்டதா தமிழ் திரைப்படங்கள்.? ரசிகர்கள் ஆதங்கம்

karnan
karnan

Tamil cinema: ஒரு தமிழ் திரைப்படத்திற்கு கூட தேசிய விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ரசிகர்கள் தேசிய விருதுகளில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்ட இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதாவது சற்று முன்பு 69 தேசிய விருதுகள் குறித்து அறிவிப்பு வெளியானது.

அதில் RRR, புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில் தமிழில் எந்த ஒரு படத்திற்கும் விருது கிடைக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இரவின் நிழல் படத்தில் மாயாவா தூயவா என்ற பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகி விருது கிடைத்திருக்கிறது.

இந்த விருது கடந்த 2021ஆம் ஆண்டுக்கான படங்களுக்கு மட்டுமே அதனை எடுத்து 2022ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிப்பும் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதன் காரணமாக தமிழ் ரசிகர்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் தமிழில் வந்த பல முக்கிய திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டு வருகின்றனர்.

அப்படி சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்தையும் கூறிய நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. எனவே இந்த திரைப்படங்களுக்கு எல்லாம் ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என தங்களுடைய ஆதங்கத்தை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து மாதவன் இயக்கி, தயாரித்து நடித்த  ராக்கெட்ரி படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்த இந்த படம் உருவாக்கப்பட்டது.