நயன்தாராவுடன் போட்டி போட ரெடியான தேசிய விருது பெற்ற நடிகை.? தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறாராம்.! யார் அது தெரியுமா..

nayanthara

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையும் அழகையும் காட்டி வலம் வந்ததால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உச்ச நட்சத்திர நடிகையாக மாறினார் இப்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். இவர் இதுவரை அஜித் விஜய் ரஜினி சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்பொழுதும் டாப் நடிகர் படங்களில் நடித்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் சிறப்பான கதைகள் அமையும் பட்சத்தில் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவரது இடத்தை பிடிக்க பல்வேறு நடிகைகள் முட்டி மோதினாலும் நயன்தாராவை ஓவர்டேக் செய்ய முடியாமல் போகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் மற்ற மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தற்போது கதைகளை கேட்டு வருகிறாராம்.

நயன்தாரா எப்படி சோலோ படங்களில் அடித்து அசத்தினாரோ அதேபோல தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் நடிகை பிரியாமணி நல்ல கதைகளை தேடிக்கொண்டிருக்கிறார் அப்படி கிடைக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என தெரியவருகிறது.

priyamani
priyamani

நயன்தாரா சிறு இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை பிரியாமணி தமிழில் நடிக்க வருவதால் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு வலம் வருவார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.