பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒரு சில சீரியல்களில் நடித்தாலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைபவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த 25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக விளங்குவது தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும் ஒரு சில சீரியல் நிறைவடைந்து பல வருடங்கள் ஆனாலும் கூட அதனை மறக்காமல் இருக்கும் அளவிற்கு பிரபலமடைந்துள்ள சீரியல்களும் இருக்கிறது. அந்த வகையில் மெட்டி ஒலி சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த சீரியலின் இயக்குனரான திருமுருகன் நாதஸ்வரம் என்ற சீரியலையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை சங்கவி. இதனையடுத்து மீண்டும் திருமுருகன் இயக்கிய குலதெய்வம் தொடரில் முக்கிய இடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்தார்.
இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ஆத்மா தொடரில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் திருமுருகன் இயக்கத்தில் உருவான கல்யாண வீடு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபல சின்னத்திரை நடிகையாக மாறினார். பிறகு இரட்டை ரோஜா சீரியலில் கடைசியாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சங்கவி தற்பொழுது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களை வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.