மறக்க முடியாமல் சமந்தாவிடம் மறைமுகமாக காதலை வெளிப்படுத்திய நாத சைத்தான்யா..! இணையத்தில் வைரலாகும் பதிவு..!

samantha naga-3

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தான்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் சுமார் நான்கு வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்கள். ஆனால் சமீபத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட வழி வகுத்து விட்டது.

இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் எந்த ஒரு காரணமும் கூறாமல் தாங்கள் விவாகரத்து செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்கள். வெளிவந்த அறிவிப்பின்படி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நாக சைதன்யா தேங்கிங்யூ என்ற திரைப்படத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராசி கண்ணா நடித்துள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

samantha naga-3
samantha naga-3

இந்நிலையில் நமது நடிகர் தனது அம்மா அப்பா மற்றும் அவருடைய வளர்ப்பு நாய் மூன்று புகைப்படங்களையும் பதிவு செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இதில் மூன்றாவதாக உள்ள புகைப்படத்தில் உள்ள நாய் சமந்தா வளர்த்த நாய் என்பதால் நாக சைதன்யா சமந்தாவை மறக்க முடியாமல் மறைமுகமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

samantha naga-3

எது எப்படியோ மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நல்லது தான் என பல கூறி வரும் நிலையில் இது உண்மையாக இருக்க வேண்டும் என  அவர்களுடைய ரசிகர்கள்  கூறி வருகிறார்கள்.