படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கிய நாசர்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

naasar
naasar

பல ஆண்டு காலங்களாக தொடர்ந்து நடித்து வரும் முக்கியமான நடிகர் தான் நாசர். ஹீரோவாகவும், வில்லனாகவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடித்து சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வருகிறார்.தன்னுடைய இயல்பான நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் சமீப காலங்களாக தாத்தா கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கம்,திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர் மற்றும் பாடகர் என அனைத்து பன்முக திறமைகளையும் உடையவர் மேலும் நடிகர் சங்கம் நிர்வாகியாகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் தமிழினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சீரியல்களின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார் அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்காத திறந்தார். இவ்வாறு நடிப்பில் மிரட்டிய இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

கொஞ்சம் கூட நேரம் இல்லாமல் மிகவும் பிஸியாக நடித்து வந்தார் இந்த நேரத்தில் கவிதை பாட நேரமில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார். இவ்வாறு பிசியாக நடித்து வந்த நிலையில் தற்பொழுது தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்ற படப்பிடிப்பின் பொழுது நாசர் விபத்தில் சிக்கி உள்ளார்.

இதனால் இவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இந்த படப்பிடிப்பில் சுகாசினி, மெஹரின் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வாறு திடீரென நாசருக்கு விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பெரிதும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக இதற்கு விரைவில் உடல் நலம் சரியாக வேண்டும் என கூறி வருகிறார்கள் தற்பொழுது மருத்துவமனையில் நாசர் உடன் அவரது மனைவி கமீலா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.