Actress nazriya first time re entry in telugu movie : தமிழில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நஸ்ரியா. இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் தான் படங்கள் நடித்து வந்தார்.
மலையாளத்தில் ஒரு சில படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இதனையடுத்து இவர் தமிழில் நடிக்கலாம் என முடிவெடுத்து தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் இவர் நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தார். அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நடிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார் நஸ்ரியா.
இவர் தெலுங்கில் நடிக்க போகும் படத்தின் அறிவிப்பு நவம்பர் 21 ஆம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் மற்ற நடிகர்கள், நடிகைகள் போன்ற விஷயங்கள் எல்லாமே அப்போது அறிவிக்கப்படும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கப்போகும் தெலுங்கு படத்தில் கிளாமராக நடிக்க வேண்டியிருக்கும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் நஸ்ரியா இதுவரை எந்த படத்திலும் அவ்வளவு கிளாமராக நடித்திருக்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.