கொரோனா பிரச்சனையின் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் 12th ரிசல்ட் வெளிவந்துள்ளது இதனை தொடக்கமாக வைத்து கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தேவயானி என்னும் மாணவி பன்னிரண்டாம் வகுப்பில்500 மார்க் எடுத்து சாதனை படைத்துளளார். இவர் மதுரையை சேர்ந்த திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வருகிறாராம் இவருடைய பெற்றோர் கணேசன், லட்சுமி இவர்கள் ஊர் ஊராக சென்று குறிசொல்லி பிழைப்பு வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி தேவயானிக்கு மூன்று சகோதரிகளும்,ஒரு சகோதரனும் உள்ளார்கள்.
இந்த மாணவியின் முதல் அக்கா வறுமையின் காரணமாக பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இவர்களுடைய பெற்றோர் இவரை மட்டும் படிக்க வைத்துள்ளார்கள் எனது குடும்பம் வறுமையை அறிந்த மாணவி தனது விடா முயற்சியினால் 500 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது இவர் கல்லூரியில் சேர பணமில்லாத காரணத்தினால் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று உதவி கேட்டு வருகிறார். இந்த நிலையில் இவரிடம் இதனைப் பற்றி கேட்கும்பொழுது எங்கள் இனத்தில் நான் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று கல்லூரியில் படித்தால் தான் என்னை பார்த்து 4 பேர் படிப்பார்கள் என்றும் நான் கல்லூரி படித்து ஆட்சியர்ராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என கூறி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி சீட் பெறுவது கடினமாக உள்ளது என்றும் அதற்காக என்னுடைய கல்லூரி படிப்பிற்க்காக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவி வேண்டும் என கேட்டுள்ளார்.