தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கிராமத்து கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் தற்போது வரை நமது மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் உயரம் சற்று அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதிலும் கொஞ்சம் உயர்ந்து தான் இருக்கிறார் அந்த வகையில் இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் எதிர்மறையான கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.
மேலும் சமீபத்தில் கூட நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா என்ற திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடித்திருப்பார். ஆனால் அதன்பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்து காணப்பட்ட நெப்போலியன் அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் நெப்போலியன் தான் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் ஆனால் அவர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு காரணம் அவருடைய மகனுக்கு மருத்துவ சிகிச்சை செய்வதற்காக தான் சென்றார். பின்னர் இந்தியாவில் அவர் செய்துவந்த தொழிலை அமெரிக்காவிலும் செய்ய தொடங்கிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் அந்த தொழில் அமெரிக்காவில் சூடு பிடித்ததன் காரணமாக அங்கேயே குடியுரிமை வாங்கி கொண்டு செட்டில் ஆகி விட்டாராம் மேலும் தற்போது நெப்போலியனுக்கு அங்கு ஐடி கம்பெனி ஒன்று உள்ளதாம் அதில் 1500 நபர்களுக்கு மேலாக வேலை செய்து வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் இன்று வரை தமிழ் சினிமாவில் மட்டும் யாரேனும் பெரிய நடிகர்கள் நடிப்பதற்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே நடிக்க வருவாராம்.