பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து போட்டி போட்ட “நானே வருவேன்”..! உண்மையை உடைத்து பேசிய செல்வராகவன்..

selvaragavan
selvaragavan

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதுவும் குறிப்பாக இயக்குனர் செல்வராவன், நடிகர்  தனுஷ் உடன் கைகோர்த்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் இவர்கள் இதுவரை நான்கு முறை கைகோர்த்த நிலையில் ஐந்தாவது முறையாக இருவரும் நானே வருவேன் படத்தின் மூலம் இணைந்தனர்.

இந்த படம் அண்மையில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை இந்த திரைப்படம் 25 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருந்திருந்தாலும் நானே வருவேன் திரைப்படம் சோலோவாக வெளியாகி இருந்தால் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.

ஆனால் நீங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து மோதியது தான் உங்களுக்கு தேவையில்லாத வேலை.. படத்தில் ஆளவந்தான் சாயல் இருத்தாகவும் பலரும் கூறி வருகின்றனர் இதற்கு சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. ஒரு படத்தில் அண்ணன், தம்பி கதாநாயகன் மற்றும் வில்லனாக நடிப்பது சிவாஜி காலத்திலிருந்து நடக்கிறது.

அந்த ஒரு புள்ளியை வைத்து இரண்டு கதைகளும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் முன்பு பல படங்கள் விடுமுறைகளில் ஒன்றாக வெளிவருவது வழக்கம் அது திருவிழாக்காலம் போல இருக்கும் ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி பார்க்க முடியவில்லை அதனை மீண்டும் இந்த திரைப்படம் மூலம் துவங்க முயற்சியாகவும் 10 நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால்..

இரண்டு படங்களையும் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்ப்பார்கள் என்று வெளியிட்டோமே தவிர 200 கோடி 300 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் போட்டி போடுவதற்காக நாங்கள் படத்தை வெளியிடவில்லை என செல்வராகவன் கூறியுள்ளார். இச்செய்தி சமுகவளை தளப்பக்கதில் வைரலாகி வருகிறது..