நானே வருவேன் படப்பிடிப்பிலிருந்து மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுஅகலப்படுத்தும் செல்வராகவன்.!

dhanush selvaragavan

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகும் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அதேபோல் நடிகர் தனுஷ் அவர்களும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் செல்வராகவன் தனுஷ் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் மீண்டும் செல்வராகவன் தனுஷ் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் நானே வருவேன் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அதேபோல் செல்வராகவன் தனுஷ், யுவன்சங்கர்ராஜா ஆகிய மூவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து ஒன்றாக பணியாற்றியுள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.மேலும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரசன்னா படத்தொகுப்பு பணியையும் செய்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ், எல்லி அவ்ராம், இந்துஜா ரவிசந்திரன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நானே வருவேன் திரைப்படத்தின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனுஷ் இருக்கும் மாஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் தனுஷ் தாடியுடன் மிக ஸ்டைலாக இருக்கிறார் நானே வருவன் திரைப்படத்தில் தனுஷின் கெட்டப் இதுதான் என சொல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.

dhanush selvaragavan
dhanush selvaragavan